திருப்பதி கோவில் வளாகத்தில் மூங்கிலால் செய்யப்பட்ட தண்ணீர் பாட்டில்கள் விற்பனை

திருப்பதி கோவில் வளாகத்தில் மூங்கிலால் செய்யப்பட்ட தண்ணீர் பாட்டில்கள் விற்பனை திருப்பதி, திருப்பதி மலைக்கு பிளாஸ்டிக் பொருட்கள் கொண்டு வர தடை விதிக்கபட்டுள்ளது. 
 
        அதற்கு பதிலாக ஸ்டீல் பாட்டில்களை விற்பனை செய்தனர். மேலும் பிரசாத லட்டுக்கள் கொடுக்கப்பட்டு வந்த பிளாஸ்டிக் பைகளுக்கு மாற்றாக சணல் பைகள் மூலம் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கி வருகின்றனர். இந்த நிலையில் பக்தர்களுக்கு விற்பனை செய்யப்படும் ஸ்டீல் பாட்டில்கள் ரூ.300, 400-க்கு விற்பனை செய்தனர். சாதாரண பக்தர்கள் அவற்றை வாங்கி பயன்படுத்த முடியாமல் அவதிபட்டனர். 
 
        இது குறித்து திருப்பதி தேவஸ்தான அதிகாரிகளுக்கு பல்வேறு புகார்கள் அளித்தனர். தேவஸ்தான அதிகாரிகள் ஆலோசனை நடத்தி மூங்கிலால் செய்யப்பட்ட குடிநீர் பாட்டில்களை விற்பனை செய்ய முடிவு செய்தனர். 
 
        அதன்படி ஒரிசா மாநிலத்தில் இருந்து மூங்கில்கள் வரவழைக்கப்பட்டு எந்திரங்கள் மூலம் மூங்கிலை வெட்டி எடுத்து அழகிய வடிவில் குடிநீர் பாட்டில்களாக தயார் செய்துள்ளனர். 
 
        இவை ரூ.30-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மூங்கிலால் செய்யப்பட்ட பாட்டில்களில் உள்ள குடிநீர் புதிய சுவையுடன் உள்ளது. இதனால் இந்த குடிநீர் பாட்டில்களுக்கு பக்தர்கள் இடையே மிகுந்த வரவேற்பு கிடைத்துள்ளது.

Comments

Popular posts from this blog

காவல்துறை தகவல் அனைத்து பிளாட்/வீட்டு உரிமையாளர்களுக்கும் உயர் எச்சரிக்கை, பாதுகாப்பு எச்சரிக்கை பாதுகாப்பாக இருக்க முயற்சி செய்யுங்கள்!!!.கொள்ளையர்கள் பயன்படுத்தும் சமீபத்திய திருட்டு தொழில்நுட்பம். வீடு வீடாகச் சென்று பொய் சொல்கிறார்கள்.

திருப்பதியில் தங்குவதற்கான இடம் முகவரி இங்கு தரப்பட்டுள்ளன....