வேலூர் மாவட்டம் அப்துல்லாபுரத்தில் கட்டப்பட்டு வரும் விமான நிலையத்தின் பணிகள் முடிந்து வரும் டிசம்பர் மாதத்திற்குள் வேலூர் விமான நிலையத்தில் இருந்து விமான சேவை தொடங்கப்படும் என தகவல்...

*Vellore Airport To Become Operational Soon, Preliminary Tests Complete | வேலூர் மாவட்டம் அப்துல்லாபுரத்தில் கட்டப்பட்டு வரும் விமான நிலையத்தின் பணிகள் தற்போது 90 சதவீதம் நிறைவடைந்துள்ளது. முதற்கட்ட சோதனைக்காக விமான போக்குவரத்து ஆணைக்குழுவிற்கு சொந்தமான விமானம் புதுடெல்லியில் இருந்து வேலூருக்கு வந்தடைந்தது. ஓடுபாதையின் அருகே 5 முறை தாழ்வாக விமானத்தை இயக்கி சோதனை செய்யப்பட்டது. முதற்கட்ட சோதனை வெற்றிகரமாக நிறைவடைந்ததை தொடர்ந்து அடுத்தக்கட்டமாக விமான ஓடுதள பாதையில் விமானத்தை இறக்கி சோதனை செய்ய உள்ளதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் விமானம் இயக்குவதற்கான அனுமதி விரைவில் கிடைத்து விடும் எனவும், வரும் டிசம்பர் மாதத்திற்குள் வேலூர் விமான நிலையத்தில் இருந்து விமான சேவை தொடங்கப்படும் எனவும் அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டுள்ளது!

Comments

Popular posts from this blog

காவல்துறை தகவல் அனைத்து பிளாட்/வீட்டு உரிமையாளர்களுக்கும் உயர் எச்சரிக்கை, பாதுகாப்பு எச்சரிக்கை பாதுகாப்பாக இருக்க முயற்சி செய்யுங்கள்!!!.கொள்ளையர்கள் பயன்படுத்தும் சமீபத்திய திருட்டு தொழில்நுட்பம். வீடு வீடாகச் சென்று பொய் சொல்கிறார்கள்.

திருப்பதியில் தங்குவதற்கான இடம் முகவரி இங்கு தரப்பட்டுள்ளன....